என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் டீசல்
பெட்ரோல்-டீசல் விலை இனி தொடர்ந்து அதிகரிக்கும்: பெட்ரோலிய வணிகர் சங்கத்தலைவர் பேட்டி
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் அந்த பெட்ரோல் டீசலுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கத்தலைவர் கூறினார்.
கடலூர்:
கடலூரில் தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்க தலைவர் முரளி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 137 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லாமல் இருந்தது. 2017-ம் ஆண்டு தினம் தோறும் விலை மாற்றம் என்ற நிலை கொண்டுவரப்பட்ட பிறகு முதல் முறையாக தற்போதுதான் 137 நாட்களுக்கு விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது பொதுமக்களையும் டீலர்களையும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சில்லரை வர்த்தகத்தில் விலை உயராமல் இருந்தாலும் மொத்த வியாபாரத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும் நிலையில், அந்த விலையில் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இந்த 137 நாட்களில் 22 ரூபாய் அளவிற்கு டீசல் விலை உயர்ந்துள்ளது.
மொத்த வியாபாரத்தில் இந்த 22 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு சில்லரை வியாபாரத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் எந்த வித விலை உயர்வும் இல்லாததால் தற்போது இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை என்பது படிப்படியாக தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது.
ஏறத்தாழ 22 ரூபாய் அளவிற்கு இந்த விலை உயர்வு கொண்டுவரப்படும் என தெரிவித்த அவர் கடுமையான விலை உயர்வை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், ஆனால் பெட்ரோலிய வணிகர்களும் பொதுமக்களும் இதனை எதிர்கொண்டே ஆகவேண்டும். பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் அந்த பெட்ரோல் டீசலுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story