என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரி
    X
    அரசு ஆஸ்பத்திரி

    திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார சீர்கேடு

    தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு, சுற்றுப்பகுதியிலிருந்து, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நம்பிக்கை மையம், ரத்த பரிசோதனை மையம் அருகில் கழிவுந்நீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக பகுதியில் குளம் போல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது.ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு கழிவறை வசதி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

    தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×