search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் மூலம் தக்காளி செடிகளை அழிக்கும் விவசாயி
    X
    டிராக்டர் மூலம் தக்காளி செடிகளை அழிக்கும் விவசாயி

    நோய் தாக்குதல், விலை குறைவு - தக்காளி செடிகளை டிராக்டர்கள் மூலம் அழிக்கும் விவசாயிகள்

    தக்காளி செடிகளில் ஊசிப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டு தக்காளிகள் ஓட்டை விழுந்து காணப்படுவதால் வியாபாரிகள் அவற்றை வாங்க முன் வரவில்லை
    பல்லடம்:

    பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர். 

    கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்தநிலையில் தக்காளி செடிகளில் ஊசிப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டு தக்காளிகள் ஓட்டை விழுந்து காணப்படுவதால் வியாபாரிகள் அவற்றை வாங்க முன் வரவில்லை. இதனால் தக்காளிகளை விளைநிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து, அவற்றை உரமாக மாற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து தக்காளி விவசாயி ஒருவர் கூறியதாவது:

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால், பல்லடம்,பொங்கலூர் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்தோம். கார்த்திகை பட்டத்தில் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் இங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 14 கிலோ தக்காளி கொண்ட பெட்டி ரூ.30க்கு விற்பனையாகிறது. இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவை கூட திரும்ப எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக மழைப்பொழிவால் தக்காளி உரிய விளைச்சல் இன்றி விவசாயிகள் யாரிடமும் தக்காளி இல்லாமல் போனது. தற்பொழுது தக்காளி நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுகிறது.

    மேலும் தக்காளி செடிகளில் ஊசிப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டு தக்காளிகள் ஓட்டை விழுந்து காணப்படுவதால் வியாபாரிகள் வாங்க முன் வரவில்லை. இதனால் தக்காளிகளை விவசாய நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகிறோம். தக்காளியுடன் அதற்காக செய்த முதலீடு, எங்கள் உழைப்பு ஆகியவை மண்ணோடு மண்ணாய் போனதுதான் மிச்சம் என்றார்.
    Next Story
    ×