search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    * * * தாளவாடி அருகே கல்குவாரியில் பதுங்கி இருந்த சிறுத்தையை படத்தில் காணலாம்.
    X
    * * * தாளவாடி அருகே கல்குவாரியில் பதுங்கி இருந்த சிறுத்தையை படத்தில் காணலாம்.

    தாளவாடி அருகே கல்குவாரியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்- விவசாயிகள் பீதி

    தாளவாடி அருகே கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி உள்பட 10 வனசரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராமங்கள் மற்றும் கல் குவாரிகளில் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்கள் போன்ற கால்நடைகளை தாக்கி கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் தாளவாடி அருகே இரியபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் சிறுத்தை ஒன்று கல்குவாரி மீது படுத்து கொண்டு இருந்தது. இதை அங்கு மாடு மேய்த்து கொண்டு இருந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார்.

    இது பற்றி அருகே உள்ள விவசாயிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, தாளவாடி அருகே கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தொடர்ந்து போக்கு காட்டி வரும் சிறுத்தையை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×