என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கடந்த 11 மாதங்களில் திருப்பூரில் இருந்து ரூ.29ஆயிரம் கோடிக்கு ஆடைகள் ஏற்றுமதி
கடந்த 11 மாதங்களில் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.55 ஆயிரத்து 650 கோடியாக உள்ளது.
திருப்பூர்:
இந்திய ஆயத்த ஆடை ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 2018 -19ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1.12 லட்சம் கோடியாக இருந்தது.
கொரோனாவால் கடந்த , 2020-21ம் நிதியாண்டில் ரூ. 90 ஆயிரத்து 624 கோடியாக ஏற்றுமதி சரிந்தது. நடப்பு 2021-22ம் நிதியாண்டில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவு நிலையில் இருந்து மீண்டு வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
ஏப்ரல், பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 207 கோடியை தொட்டுள்ளது. ஆயத்த ஆடைகளில், பின்னலாடை ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 11 மாதங்களில் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.55 ஆயிரத்து 650 கோடியாக உள்ளது. தமிழகத்தின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.29 ஆயிரத்து 710 கோடி .
இதில்ரூ.28 ஆயிரத்து 960 கோடி மதிப்பிலான பின்னலாடை ரகங்களை உலக சந்தைக்கு திருப்பூர் ஏற்றுமதி செய்துள்ளது. இம்மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைகிறது. வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால், நிதியாண்டு மொத்த வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி பெறும் என்கிற நம்பிக்கை ஆடை ஏற்றுமதியாளர் மத்தியில் பிறந்துள்ளது.
Next Story






