என் மலர்
உள்ளூர் செய்திகள்

யூனியன் கூட்டம்.
யூனியன் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு யூனியன் கூட்டம் தலைவர் சிந்துமுருகன் தலைமையில் நடந்தது
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சிந்துமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஒன்றியக்குழு தலைவர்சிந்துமுருகன் கூறுகையில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 27ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலைவசதி, பொது சுகாதாரம், தெருவிளக்குகள், வாறுகல்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்தந்த வார்டுகளில் உள்ள ஒன்றியகுழு உறுப்பினர்களிடம் பொதுமக்கள் நேரடியாக அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைவைக்கலாம் என்றார்.
துணைத்தலைவர் ரேகா, உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியவதி, ராமமூர்த்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டீஸ்வரன், உதவி பொறியாளர்கள் தீபக்ராஜ், ஜெயா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






