என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 2 குழந்தைகளுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டை,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளியை சேர்ந்தவர் டிரைவர் துரைராஜ் இவரது மனைவி மாதம்மாள் (வயது 30).
இந்த நிலையில் மனைவி மாதம்மாள் நடத்தையில் சந்தேகம் அடிக்கடி கணவன்&மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மாதம்மாள் கோபித்துக்கொண்டு ராயக்கோட்டையில் உள்ள அவரது தாயார் நீலா வீட்டுக்கு மகன் வினோத் (11) மகள் உஷா (9) அழைத்துக்ª காண்டு வந்தார். இந்த நிலையில் மாதம்மாள், தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. கடந்த ஒரு மாதத்மாக பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் மாதம்மாள் தாயார் நீலா ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்ட்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






