search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு (கோப்பு படம்)
    X
    பாம்பு (கோப்பு படம்)

    விழுப்புரத்தில் கோவில் வளாகத்தில் புகுந்த பாம்பை கடித்து கொன்ற பூனை

    விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 2 அடி நீளமுள்ள பாம்பு நுழைந்தது.

    விழுப்புரம்:

    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பூனை, கீரிப்பிள்ளை ஆகிய விலங்குகள் பாம்புகளை அசாத்தியமாக கடித்து கொன்று விடும்.

    எனவே வீடுகளில் பூனைகளை வளர்ப்பது உண்டு. பூனைக்கு அதிக மோப்ப சக்தி உண்டு. குடியிருப்பு பகுதியில் பாம்பு நுழைந்து விட்டால் மோப்பம் பிடிக்கும் பூனைஅதனை கடித்துகொன்று விடும்.

    இதேபோலத்தான் கோவிலுக்கு புகுந்த பாம்பை பூனை கடித்து கொன்ற சம்பவம் தற்போது வீடியோவில் வைரலாகி வருகிறது.

    விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 2 அடி நீளமுள்ள பாம்பு நுழைந்தது. இதை பார்த்த பூனை, பாம்புடன் நீண்ட நேரம் சண்டையிட்டது. போக்கு காட்டிய பாம்பின் தலையை பூனை கவ்விப் பிடித்து கடித்துக் கொன்று தூக்கிச் சென்றது. கடிபட்டு இறந்த பாம்பு என்ன வகையை சேர்ந்தது என தெரியவில்லை.

    Next Story
    ×