என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்து
மின் கம்பியில் உரசியதால் தீ - வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து நாசம்
பண்ருட்டி அருகே வைக்கோல் ஏற்றிய டிராக்டர் மீது உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் டிராக்டர் முழுவதும் எரிந்து நாசமானது.
பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிய டிராக்டர் இன்று காலை பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
பண்ருட்டி அருகே சென்ற போது உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. அதிர்ச்சி அடைந்த டிராக்டரில் இருந்தவர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர்.
இதுபற்றி உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நிலைய அலுவலர் ஜமூனா ராணி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். என்றாலும் டிராக்டர் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






