என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விலை கிடைக்காததால் வெண்டைக்காய்களை அழிக்கும் விவசாயிகள்

    வெண்டையில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் விவசாயிகள் மாடுகளை மேயவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    வெண்டைக்காய் சாகுபடி செய்த 45 நாட்களில் அறுவடைக்கு வரும். இதை பறிப்பதற்கு ஆட்கள் வர தயங்குகின்றனர். இதனால் அறுவடை செய்ய திறமையுள்ள விவசாயிகள் மட்டுமே வெண்டை சாகுபடி செய்வர். 

    இந்த சீசனில் சாகுபடி பரப்பு அதிகரித்தது.தேவையை விட உற்பத்தி அதிகரித்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ. 20க்கு ரூபாய்க்கு விலை போகிறது. இது அறுவடை செய்வதற்கே சரியாக போய் விடுகிறது. இச்சூழலில் பொங்கலூர் அருகே ஆலாம்பாளையத்தில் வெண்டையில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் விவசாயிகள் மாடுகளை மேயவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×