என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதவியேற்பு
    X
    பதவியேற்பு

    வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்தமாதம் 19ந்தேதி நடைபெற்றது. 

    4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 117 வார்டுகளில் 544பேரும், 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டுகளில் 641 பேரும் போட்டியிட்டனர். பேரூராட்சி வார்டுகளை பொறுத்தவரை கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8வது வார்டில் யாரும் போட்டியிடாததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. 

    அந்த வார்டை தவிர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 284 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது-. தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 


    அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று நடந்தது. 

    நகராட்சிகளை பொறுத்தவரை சிவகங்கையில் 27 வார்டு கவுன்சிலர்கள், காரைக்குடியில் 36 வார்டு கவுன்சிலர்கள், தேவகோட்டையில் 27 வார்டு கவுன்சிலர்கள், மானாமதுரையில் 27 வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 117பேர் பதவியேற்றனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத் தனர். 

    இதேபோல் பேரூராட்சிகளில் இளையான்குடியில் 18 வார்டு கவுன்சிலர்கள், கானாடுகாத்தானில் 12 வார்டு கவுன்சிலர்கள், கண்டனூரில் 15 வார்டு கவுன்சிலர்கள், கோட்டையூரில் 15 வார்டு கவுன்சிலர்கள், நாட்டரசன்கோட்டையில் 12 வார்டு கவுன்சிலர்கள், நெற்குப்பையில் 12 வார்டு கவுன்சிலர்கள், பள்ளத்தூரில் 15 வார்டு கவுன்சிலர்கள், புதுவயலில் 15 வார்டு கவுன்சிலர்கள், சிங்கம்புணரியில் 18 வார்டு கவுன்சிலர்கள், திரும்புவனத்தில் 18 வார்டு கவுன்சிலர்கள், திருப்பத்தூரில் 18 வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 168 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். 

    மாவட்டம் முழுவதும் வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க அனுமதியல்லாததால், அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.  கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவை முன்னிட்டு அனைத்து நகராட்சிமற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  
    Next Story
    ×