search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேனியில் வருகிற 12ந் தேதி லோக் அதாலத்

    தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வருகிற 12ந் தேதி லோக் அதாலத் நடைபெறுகிறது.
    தேனி:

    தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தேசிய சட்ப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி பெரிய குளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்ட சட்டப்பணிகள் குழுவில் வரும் 12ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

    நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கில் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்படும். மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள்,

    சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக் கடன் சம்மந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்கு, வருவாய் சம்மந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு பிரச்சினைகளை சமா தானமாகவும், விரிவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள வழக்காடுபவர்கள் மற்றும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் மக்கள் நீதி மன்றத்தை அணுகி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×