என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
பெருந்துறை அருகே சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்-3பேர் கைது
பெருந்துறை அருகேசேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
பெருந்துறை அருகேசேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
பெருந்துறை அரசன் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், பெருந்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று சேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் சென்னிமலை கள்ளிகாட்டு தோட்டத்தை சேர்ந்த சரவணன்(27), சிலாம்பட்டி ஆனந்தன்(29), அனுமன்பள்ளி வெள்ளிவலசை சேர்ந்த தாரனேஷ் ¢(21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து, 4 சேவல்கள் மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Next Story






