search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 585 மாடுகள் பிடிபட்டன- உரிமையாளர்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம்

    மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நேற்று முன்தினம் 21 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.32,550 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகாரட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு பெரம்பூர் மற்றும் புதுப்பேட்டை மாட்டுத் தொழுவங்களில் அடைக்கப்படுகிறது.

    பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் அதனை விடுவித்து செல்ல பிரமாண பத்திரம் கொடுக்க வேண்டும். 3-வது முறையாக ஒரு மாடு தொடர்ந்து பிடிபடும் போது உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நேற்று முன்தினம் 21 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.32,550 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல ஜனவரி மாதம் 287 மாடுகளும், இந்த மாதம் 298 மாடுகளும் மொத்தம் 2 மாதங்களில் 585 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமாக ரூ.9 லட்சத்து 6 ஆயிரத்து 750 விதிக்கப் பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத் தப்படுகிறது. மீறினால் காவல் துறையின் மூலம் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித் துள்ளது.

    Next Story
    ×