search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தம்

    மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    வட மாநிலங்களில் இருந்து பின்னலாடை சார்ந்த வேலைவாய்ப்பு தேடி தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரெயில் மூலம் திருப்பூர் வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து உயிரிழப்பு அதிகரித்ததால் இங்குள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கில் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. 

    மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, சுகாதாரத்துறை மூலம் டாக்டர், செவிலியர், உதவியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வடமாநில ரெயிலில் வந்திறங்குவோர் கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

    பணியில் இருந்து மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் மாற்று பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாத 18 வயதை கடந்தவருக்கு பிளாட்பார்மில் முகாம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தொற்று பரிசோதனை நிறுத்தப்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×