search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள குடோனை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - ரெயில்வே மேலாளருக்கு மனு

    விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகின்றன.
    உடுமலை:

    திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் உடுமலை ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நூற்பாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இப்பகுதியில் அதிக அளவில் இயங்கி வருகிறது. எனவே உடுமலை ரெயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

    உடுமலை ரெயில்வே நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பராமரிப்பில்லாமல், கைவிடப்பட்ட பாழடைந்த குடோன் உள்ளது. கோவை மாவட்ட சிந்தாமணி கூட்டுறவு சங்க பயன்பாட்டுக்காக இந்த குடோன் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒப்பந்த காலம் நிறைவு பெற்ற பிறகு இந்த குடோன் பராமரிக்கப்படவில்லை. 

    இதனால் குடோன் சமூக விரோத செயல்களின் மையமாக மாறியுள்ளது. கட்டிடத்தின் ஒரு பகுதி புதர்மண்டி காணப்படுவதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களின் மையமாக மாறியுள்ளது.

    இதுகுறித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. இதே போல் நூற்பாலை மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகளும் அதுசார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    எனவே விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே உடுமலை ரெயில் நிலையம் வாயிலாக கிசான் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    எனவே ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள குடோனை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் விவசாய விளைபொருட்களை சேமித்து வைத்து பயன்படுத்த உதவியாக இருக்கும். தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×