என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரூர் அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி ஊராட்சியில் உள்ள வாழைத் தோட்டம், ஆண்டிப்பட்டி, கொளகம்பட்டி, எருக்கம்படி, வரிசைப்படி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரூரில் பயின்று வருகின்றனர். 

    இந்த மாணவர்கள் தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு காலை அரசு பேருந்து தடம் எண் 17 வருகிறது. ஆனால் மாலை பள்ளி, கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்கு கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் வருவதில்லை. 

    இதனால் அரூரில் இருந்து கடத்தூர் செல்லும் அரசு பேருந்துகளில் பயணம் செய்து, வனப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் நடந்து செல்கின்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மாணவ மாணவிகள் நடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. 

    இந்த நிலையில் அரூர் அருகே வனப்பகுதியில் ஒட்டியே அரசு மதுபான கடை இருப்பதால், மது பிரியர்கள் இந்தக் கொளகம்பட்டி செல்லும் சாலையில் அதிகப்படியாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் வீடு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. 

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019ஆம் ஆண்டு அரூரில் இருந்து மாலை 5 மணிக்கு கடத்தூர் செல்லும் அரசு பேருந்து  தடம் எண் 8,  வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, கொளகம்பட்டி வழியாக பெத்தூர், சிந்தல்பாடி கடத்தூர் செல்கிறது. 

    இந்தப் பேருந்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வசதியாக இருந்தது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு பெருஞ்தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு பேருந்து வாழைத்தோட்டம், ஆண்டிபட்டி, கொளகம்பட்டி வழியாக வருவதில்லை. மாறாக அரூரில் இருந்து பெத்தூர், சிந்தல்பாடி வழியாகவே கடத்தூர் செல்கிறது. இது குறித்து பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

    நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்திலிருந்து இறங்கியவுடன் கிராமத்திற்குள் வந்து செல்லுமாறு, சாலையில் நின்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த அரசு பேருந்து ஓட்டுனர் மாணவர்கள் மீது பேருந்து ஏற்ற முயற்சி செய்துள்ளார். 

    இதனால் அச்சம் அடைந்த மாணவ, மாணவிகள் பயந்து சாலையோரம் சென்றுள்ளனர். இதனை அடுத்து பின் தொடர்ந்து வந்த மற்றொரு அரசு பேருந்தை பள்ளி, கல்லூரி, மாணவ,-மாணவிகள் சிறைப்பிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்திற்குள் பேருந்து வர வேண்டும், பேருந்து வராததால் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. 

    இதனால் மது பிரியர்களால் மாணவிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவ-மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து வழக்கம்போல் கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×