என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 20 வேட்பாளர்கள் விவரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மடத்துக்குளம் பேரூராட்சியில் 11-வது வார்டு தி.மு.க.கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில்  20 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதன்படி உடுமலை நகராட்சியில் ஒருவர், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 13 பேர், மடத்துக்குளம் பேரூராட்சியில் ஒருவர், கொளத்துபாளையம் பேரூராட்சியில் ஒருவர், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பேர், மூலனூர் மற்றும் முத்தூர் பேரூராட்சிகளில் தலா ஒருவர் என மேற்கண்ட பேரூராட்சிகளில் 19 பேர் என  மாவட்டம் முழுவதும் மொத்தமாக 20 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் மொத்தம் உள்ள 5 பேரூரா ட்சிகளில்  4 பேரூராட்சிகளில் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னக் காம்பாளையம் பேரூ ராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 13  வேட்பாளர்கள் விவரம்:-

    பி.செல்வி,1-வது வார்டு தேவநல்லூர், (தி.மு.க.), கே.செல்வி 2-வது வார்டு, கொட்ட முத்தாம்பாளையம், (தி.மு.க.), மருதீஸ்வரி சோமனூத்து 4-வது வார்டு, கம்யூனிஸ்ட் கட்சி (தி.மு.க. கூட்டணி வேட்பாளர்), கோவிந்தராஜ் ,5-வது வார்டு சீலநாயக்கன்பட்டி, (தி.மு.க.), கன்னீஸ்வரி,6-வது வார்டு, சின்னக்காம் பாளையம்(தி.மு.க.),மீனாட்சி 8-வது வார்டு, சிக்கினாபுரம், (தி.மு.க.),  கமலம் 9-வது வார்டு, செலாம் பாளையம்,சுயேட்சை வேட்பாளர் (தி.மு.க. ஆதரவு).பிரதாப் மூர்த்தி ,10-வது வார்டு, செலாம் பாளையம், (தி.மு.க.), சிவகுமார் ,3-வது வார்டு (அ.தி.மு.க.),சுரேஷ்குமார், 11-வது வார்டு (அ.தி.மு.க.),முருகன்பால், 13-வது வார்டு, (அ.தி.மு.க.,),பிரியங்கா 14-வது வார்டு (அ.தி.மு.க.),மகேஸ்வரி 15--வது வார்டு(அ.தி.மு.க.). 8 வேட்பாளர்களில் 6 பேர் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி 1, சுயேச்சை வேட்பாளர்-1,அ.தி.மு.க.வில் 5 வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 

    இதேபோல் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்திராவதி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் விபரம் வருமாறு:-

    வேலுமணி, 8-வது வார்டு, சுயேட்சை வேட்பாளர்,சுமதி, 14-வது வார்டு, (அ.தி.மு.க.) ருத்திராவதி பேரூராட்சியில் மேற்கண்ட 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் மூலனூர் பேரூராட்சியில் 12-வது வார்டில் கலாவதி ராமநாதன் (சுயேச்சை வேட்பாளர்) போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதேபோல் கொளத்து பாளையம் பேரூராட்சியில் 17&வது வார்டில் தேன்மொழி நாகராஜ் (தி.மு.க.)  போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

    அதேபோல்,  உடுமலை நகராட்சியில் 14-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மும்தாஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துவேட்புமனு தாக்கல் செய் திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் சாய்ரா பேகம் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார்.

    மடத்துக்குளம் பேரூராட்சியில் 11-வது வார்டு தி.மு.க .கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது ம.தி.மு.க.வை சேர்ந்த சிவமணி என்பவர் சுயேச்சையாக போட்டி யிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால்  சிவமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இதேபோல் முத்தூர் பேரூராட்சியில் 2-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மணி மேகலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×