என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ராஜ்மோகன்
    X
    ராஜ்மோகன்

    திண்டுக்கல் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் 1,236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகனும், தி.மு.க. சார்பில் தொழிலதிபரின் மகனுமான நாகராஜனும் போட்டியிட்டனர்.

    இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த வார்டில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த வார்டில் இரவு முழுவதும் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வார்டில் இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்மோகன் 1236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளருக்கு 814 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
    Next Story
    ×