என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியபோது எடுத்த படம்
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒரு மாதம் கொண்டாட ஏற்பாடு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை மார்ச் 1-ந் தேதியில் இருந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பான முறையில் மாதம் முழுவதும் எழுச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற் குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரி என்.பி.ஆர். திருமண மண்டபத்தில் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் மாவட்டக்கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசி முடித்ததும், தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் உரையாற்றினார். முடிவில் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக மக்களின் நல்லாதரவுடன் மகத்தான வெற்றியை பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்கள் மனம் மகிழும் வகையில் நல்லாட்சி நடத்தி, இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் என்ற வரலாற்று சாதனையை படைத்த அன்புத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்த நாளை மார்ச் 1-ந் தேதியில் இருந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் மிகவும் சிறப்பான முறையில் மார்ச் மாதம் முழுவதும் எழுச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய நகர, பேரூர்களில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி, ஒலி பெருக்கி அமைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது.
40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு மதிய உணவு, உடைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 1-ந் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள பகுதி, நகரம், ஒன்றியம் பேரூர் வாரியாக தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை பதிவு செய்து உருவாக்கி உள்ள உங்களின் ஒருவன் என்ற வாழ்க்கை பயணம் புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்களும் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் திரளாக அணி திரண்டு பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும். விழாவுக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிண்டி கத்திபாரவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பும் கொடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

Next Story