என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தப்படம்.
    X
    திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தப்படம்.

    திருவண்ணாமலையில் பா.ஜ.க.மகளிர்அணியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

    தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர், நகர பொதுச்செயலாளர் மற்றும் பா.ஜ.க.மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளையும் தி.மு.க.வினர் தாக்கியதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.திருவண்ணாமலை 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்குப்பதிவு நகராட்சி பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

    அப்போது தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர், நகர பொதுச்செயலாளர் மற்றும் பா.ஜ.க.மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளையும் தி.மு.க.வினர் தாக்கியதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து இன்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில்மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் ஜீவானந்தம், பட்டியல்அணி பொதுச் செயலாளர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க.மகளிர்அணியினரை தாக்கிய தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×