search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடியில் நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு பயிற்சி - 24-ந்தேதி நடக்கிறது

    தூத்துக்குடியில் நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டுண்ணுயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு பற்றிய ஒருநாள் வளாக பயிற்சி வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சியில் ஒட்டுண்ணுயிரி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம், இத்தொழில் நுட்பத்திற்கேற்ற நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல்திறன் மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.

    பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். 

    விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் வருகிற
    23-ந் தேதி மாலை 5 மணிக்குள் பேரா சிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்புதுறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
    தூத்துக்குடி -628008 என்ற முகவரியிலும், செல்போன் எண்கள் 80722-08079,
    94422-88850, மின்அஞ்சல் anix@tnfu.ac.in,athithan@tnfu.ac.in-லும் தொடர்பு கொள்ளலாம்.

     இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×