search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பணப்பட்டுவாடா செய்த கல்லூரி மாணவர் கைது

    நெற்குன்றத்தில் வீடு, வீடாக பணப்பட்டுவாடா செய்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் ரூ. 41 ஆயிரத்து 600 ரொக்கம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவரி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 11-க்கு உட்பட்ட 148-வது வார்டு நெற்குன்றம் தேசம்மாள் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    உதவி பொறியாளர் கவியரசு தலைமையில் விரைந்து வந்த பறக்கும் படையினர் பணம் பட்டுவாடா செய்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    பிடிபட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணன் என்பது தெரிந்தது. அவனிடம் இருந்து ரூ.41 ஆயிரத்து 600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் கோயம்பேடு போலீசார் தப்பி ஓடிய அவனது கூட்டாளியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×