என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாள்வெட்டு
    X
    அரிவாள்வெட்டு

    தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

    அவனியாபுரத்தில் தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை


    மதுரை சிந்தாமணி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 29). இவர் அவனியாபுரம் கிழக்கு இளைஞரணி தி.மு.க. துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அய்யனார் (வயது26) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன்விரோதம் உள்ளது. 

    இந்தநிலையில் சரத்குமார் நேற்று நள்ளிரவு சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அய்யனார் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் அவரை விரட்டியது. இதனால் சரத்குமார் உயிர் பிழைப்பதற்காக தப்பி ஓடினார். 

    இருந்தபோதிலும் அந்த கும்பல், விடாமல் துரத்திச்சென்று சரத்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் சரத்குமாருக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அலறிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

    அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சரத்குமார் கீரைத்துறை போலீ சில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் அய்யனார், பாண்டிகுமார் (26), சிந்தாமணி பசும்பொன் தெரு ரமேஷ் மகன் மணிகண்டன்(24), சிந்தாமணி அழகர்நகர் உதயகுமார் மற்றும் குமரவேல் ஆகிய 5 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதுதவிர தப்பிஓடிய யோகேஷ் மற்றும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
    Next Story
    ×