என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது
    X
    விழிப்புணர்வு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது

    தேனி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்

    தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை
    தேனி:

    இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் “எனது வாக்கு எனது எதிர்காலம்” - “ஒரு வாக்கின் வலிமை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்திட உத்தரவிட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.

    அதனைத்தொடர்ந்து, தேசிய அளவில் “எனது வாக்கு எனது எதிர்காலம்”  “ஒரு வாக்கின் வலிமை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வினாடிவினாப் போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப்போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரபட வடிவமைப்புப் போட்டி என 5 பிரிவு போட்டிகள் நடத்தி, வாக்காளர்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்திட நடவடிக் கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இப்போட்டிகளில் நிறுவனம் சார்ந்த நபர்களுக்கான போட்டி வகை, தொழில் சார்ந்தவர் வகை தொழில் சாராதவர் வகை என வகைப்படுத்தப்பட்டு, முதல், இரண்டு, மூன்று மற்றும் சிறப்பு பரிசுத்தொகைகள் வழங்கப்படவுள்ளது.

     பங்கேற்பாளர்கள் தாங்கள் விண்ணப்பிக்க இருக்கும் போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவனற்றை மின்னஞ்சலின் பொருள் பகுதியில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எனவே, பொதுமக்கள் மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு போதிய விழிப்புணர்வை துறை அலுவலர்கள் ஏற்படுத்திட வேண்டும் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
    Next Story
    ×