என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
மங்கலம் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து
தீ விபத்து குறித்து பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் மில் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சி- மேட்டுப்பாளையம் பகுதியில் பார்வதி என்பவருக்கு சொந்தமான பனியன் கழிவுத்துணிகள் குடோன் உள்ளது.அங்கு முகமது ரூமி (45) என்பவர் பனியன் கழிவுத்துணிகளை அரைத்து பஞ்சாக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கழிவுத்துணிகளை அரைத்து பஞ்சாக்கும் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் மில் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மங்கலம் போலீசாருக்கும் ,பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான 7 வீரர்கள் அரை மணி நேரம் போராடி பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் சுமார் ரூ. 50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






