என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை
மதுரை கோட்ட தட்சிண ரெயில்வே தொழிலாளர் சங்கம் (டி.ஆர்.இ.யூ.) சி.ஐ.டி.யு. சார்பில் மதுரை ரெயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் அருகில் கோட்ட உதவிச் செயலாளர் கார்த்திக்சங்கிலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது-
நிரந்தரம் அல்லாத ஊழி யர்களை ரெயில்வே கேட்டுகளில் பணியமர்த்துவதை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். ரெயில் மற்றும் சாலை பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் படித்த இளைஞர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை நிரந்தர ஊழியர் களாக பணியமர்த்த வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் கிளை செயலாளர் காட்டுராஜா முன்னிலை வகித்தார். கோட்ட இணை செயலாளர் சங்கரநாராயணன் சிறப்புரையாற்றினார். கோட்ட உதவிச் செயலாளர் குமார், உதவிச் செயலாளர் சவுந்திர ராஜன், உதவித்தலைவர் ஜெயராஜசேகரன், பொது கிளை தலைவர் சலீம் ஆகியோர் பேசினர். செங்கோட்டை கிளை செயலாளர் உன்னிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Next Story






