என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை காயத்திரி ரகுராம் பிரசாரம் செய்தார்.
கொடைக்கானலில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு காயத்திரி ரகுராம் வாக்கு சேகரிப்பு
கொடைக்கானல் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் தற்போது நடிகை காயத்திரி ரகுராம் வாக்கு சேகரித்து வருவதால் அப்பகுதியில் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள 24 வார்டுகளில் பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் 14-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., சுயேட்சை என 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நடிகையும், பா.ஜ.க. கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவருமான காயத்திரி ரகுராம் மற்றும் துணை நடிகர் சசிகுமார் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
அவர்கள் நேதாஜி நகர், எம்.எம். தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று, பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திரையுலகினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதால் அப்பகுதியினர் வரவேற்பு அளிப்பதுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
முன்னதாக கொடைக்கானல் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் தற்போது நடிகை காயத்திரி ரகுராம் வாக்கு சேகரித்து வருவதால் அப்பகுதியில் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

Next Story