என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடி கைது
    X
    ரவுடி கைது

    ஆயுதங்களுடன் ரவுடி கைது

    மதுரையில் ஆயுதங்களுடன் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை


    மதுரை மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் பகுதியில் கீரைத்துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபரை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். 

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் ஒரு வாள், 3 அரிவாள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது அவர் மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பகுதியை சேர்ந்த அருண்பாண்டி என்பதும், இவர்மீது கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்தது. 

    கீரைத்துறை போலீசார் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக அருண்பாண்டியை கைது செய்தனர்.
    Next Story
    ×