என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமராவதி பகுதியில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள்

    அணையிலும் நீர் இருப்பு உள்ளதால் 2-ம் போக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    உடுமலை:

    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவியதால் உடுமலை அமராவதி அணையின் நீர்இருப்பு 70 அடிக்கும் மேலாக இருந்து வருகிறது. 

    இதனால் இந்த ஆண்டு கல்லாபுரம்-ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் இரண்டு போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து தற்போது அறுவடை நிலையை எட்டி உள்ளது.

    அதைத் தொடர்ந்து எந்திரத்தின் உதவியுடன் அறுவடை பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டில் பருவநிலையும் ஒத்துழைத்து மழைப்பொழிவும் சீராக பெய்ததால் கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    மேலும் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால் வைக்கோலை வாங்குவதற்கு கால்நடை வளர்ப்போர் ஆர்வமாக உள்ளனர். இதற்காக வைக்கோல் கட்டு கட்டும் எந்திரங்களும் அமராவதி பகுதியில் முகாமிட்டு உள்ளன. அத்துடன் அணையிலும் நீர்இருப்பு உள்ளதால் 2-ம் போக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
    Next Story
    ×