என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மலைக்கோட்டை இன்று வெறிச்சோடி காணப்பட்டது
    X
    திண்டுக்கல் மலைக்கோட்டை இன்று வெறிச்சோடி காணப்பட்டது

    காதலர்களுக்கு தடையால் வெறிச்சோடிய திண்டுக்கல் மலைக்கோட்டை

    திண்டுக்கல் மலைக்கோட்டையில் காதலர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது
    திண்டுக்கல்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் காதலர்கள் சுற்றுலா இடங்களிலும், கடற்கரை, ஏரி, பூங்கா ஆகிய பகுதிகளுக்கும் சென்று நினைவு பரிசுகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளமான கொடைக் கானலில் ஏரி, பூங்கா மற்றும் சுற்றுலா இடங்களில் அதிக அளவு காதலர்கள் குவியத்தொடங்கினர். கடந்த காலங்களில் இதுபோன்ற பொது இடங்களில் சுற்றித் திரியும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டம் நடைபெறும்.

    தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக அதுபோன்ற போராட்டங்கள் நடைபெறவில்லை. இதனால் காதலர்கள் எந்தவித தடையுமின்றி உற்சாகமாக தங்கள் துணையுடன் பொழுதைக் கழித்தனர்.

    இதேபோல திண்டுக்கல் மலைக்கோட்டையும் காதலர்களுக்கு மிகச்சிறந்த பொழுது போக்கு இடமாக விளங்கிவருகிறது. காதலர்கோட்டை என்றே மலைக்கோட்டைக்கு ஒருபெயரும் உள்ளது. ஆனால் தற்போது காதலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பெரும்பாலானோர் இங்கு வருவதை  தவிர்த்தனர்.

    இதனால் எப்போதும் காதலர்களால் நிரம்பிவழியும் மலைக்கோட்டை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. காதலர்கள் திரையரங்கு மற்றும் வேறு இடங்களில் ஒன்றுகூடி காதலர் தினத்தை கொண்டாடினர்.

    காதலர்தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாவை பரிசளிப்பது வழக்கம். இதனால் இன்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ரோஜா விலை பலமடங்கு உயர்ந்தது. இருந்தபோதும் காதலர்கள் கூடுதல் விலைகொடுத்து அதனை வாங்கி தங்கள் துணைக்கு பரிசாக வழங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் முகூர்த்தநாள் என்பதால் மல்லிகை உள்பட பெரும்பாலான பூக்களின் விலையும் அதிகரித்து விற்க்கப்பட்டது.
    Next Story
    ×