என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே உள்ள சித்தையன்கோட்டையில் வன அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பறவைகள் கணக்கெடுப்பு நடை
திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் வனத்துறையின் மூலம் 2022ஆம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈரநிலப்பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் கடந்த 2 நாட்களாக காலை 6 மணி முதல் 11 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. வனம் பவுண்டேசன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் காப்புக்காடுகளுக்கு உள்ளேயும் மற்றும் காப்புக் காடுகளுக்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையிலான ஈர நிலங்கள், நீர் நிலைகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணப்படுகின்றன. இவைகளில் பல்வேறு வகையான பறவை இனங்கள் தங்கியும், அவ்வப்போது வலசை வந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன.
எனவே அவைகளின் எண்ணிக்கை, இனங்கள், எந்த பகுதிகளில் எவ்வகையான பறவையினங்கள் வாழுகின்றன என்பன போன்ற தகவல்களை கணக்கெடுத்து அரியவகை இனங்கள் காணப்பட்டால் அவைகளை அழிவிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
அதன்படி, திண்டுக்கல் வனக்கோட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பிற்காக, முன் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பறவைகள் கணக்கெடுப்பு பணி பல்வேறு துறைகளில் பணியாற்றும் தன்னார் வலர்களை ஒருங்கிணைத்து மொத்தம் 50 நபர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் வனக்கோட்டத்தில் காப்புக் காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளில் வேடசந்தூர் குளம், அழகாபுரி அணை, அன்னபாச்சலூர் அணை, நல்லதங்காள் ஓடை, மாரியம்மன் கண்மாய், செம்பட்டி கண்மாய், டேனரி கண்மாய், சீலப்பாடி கண்மாய், நந்தவனப்பட்டி கண்மாய், செட்டிநாயக்கன்பட்டி கண்மாய், ஆத்தூர் காமராஜர் அணை, அரண்மனை குளம் ஆகிய 12 நீர் நிலைகளில் சம்பந்தப்பட்ட வன அலுவலர்கள், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட தனித்தனிக்குழுக்கள் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

Next Story