என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருடிய 3 பேர் கைது
சேலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மனைவி லதா (வயது 40). இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பழைய பஸ்நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது லதா பணம் வைத்திருந்த மணிபர்சை, பஸ்சில் பயணம் செய்த 3 பெண்கள் நைசாக திருடினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதை பார்த்த சக பயணிகள் அந்த பெண்களை மடக்கி பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த சாந்தி (47), விஜயா (40), கண்மணி (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story






