என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் கொடி அணிவகுப்பு
    X
    போலீசார் கொடி அணிவகுப்பு

    நாகப்பட்டினத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

    நாகப்பட்டினம் நகராட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், உத்தரவின்பேரில் நாகப்பட்டினம் உட்கோட்டம் மக்கள் நெருக்கடி மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    துணை காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன். (நாகப்பட்டினம் உட்கோட்டம்), சுந்தர்ராஜ் (ஆயுதப்படை), கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள், தாலுகா காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மற்றும் ஊர்க்காவல் படை என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×