என் மலர்
உள்ளூர் செய்திகள்

சஸ்பெண்டு
கோட்டாட்சியர் பெயரை கூறி பணம் வசூலித்த வி.ஏ.ஓ. சஸ்பெண்டு
தேவகோட்டை அருகே கோட்டாட்சியர் பெயரை கூறி பணம் வசூலித்த வி.ஏ.ஓ. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தேவகோட்டை
தமிழக அரசு பட்டா மாறுதல் தொடர்பாக அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரடியாகச்சென்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் வருவாய் சம்பந்தமான சான்றிதழுக்கு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அரண்மனை சிறுவயல் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பட்டா மாறுதலில் திருத்தம் செய்ய அப்பகுதி மக்களிடையே கோட்டாட்சியர் பிரபாகரன் பெயரை சொல்லியும், மேலும் அதிகாரிகளின் பெயரை சொல்லியும் பணம் கேட்டதாக கோட்டாட்சியருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலினை தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். கோட்டாட்சியரின் அதிரடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Next Story






