search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    12-ந்தேதி முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம்

    11ந் தேதிக்குள் அச்சிடும் பணியை முடிக்க வேண்டும். 12-ந்தேதி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சித்தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

    இந்தநிலையில் தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு பூத் சிலிப் வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

    பிரதான வாக்காளர் பட்டியல் மற்றும் துணை வாக்காளர் பட்டியல்கள் ஆன்லைன் மூலம் தயார் செய்யப்பட்டு ஏற்கனவே கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளன.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரால் வெளியிடப்பட்ட பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நீக்கல் வாக்காளர்களை தவிர அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்பை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து பின்னர் அச்சிட்டு தயார் செய்து வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்.

    அதன்படி கடந்த 4-ந் தேதி முதல் வருகிற 10-ந் தேதிக்குள் பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்து அச்சிடும் பணிக்கு கொடுக்கவேண்டும்.11-ந் தேதிக்குள் அச்சிடும் பணியை முடிக்க வேண்டும். 12ந் தேதி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

    இந்த பணியில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கக்கூடாது. இதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். 

    பூத் சிலிப்பை வினியோகம் செய்ய முடியாதவற்றை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு முன்பு அமர்ந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பை வழங்க பொறுப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×