என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழக சட்டசபை
  X
  தமிழக சட்டசபை

  நீட் விவகாரம்- சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.
  சென்னை:

  தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பியது குறித்து கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

  அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில்  8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

  அதன்படி இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை முழுவதுமாக அரங்கிற்கு படித்துக் காட்டினார்.

  இன்று நடைபெறும் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேரலையில் ஒளிப்பரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×