என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    X
    முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆத்தூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    தென்திருப்பேரை:


    ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியில் நேற்று கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மாவட்ட மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜன் மற்றும் திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முகாமில் ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில் கண்ணன், மற்றும் நோய் புலனாய்வு பிரிவு டாக்டர் செய்யது அபுதாஹிர் தலைமையிலான மருத்துவ குழுக்கள் மூலமாக கால்நடைகளுக்கு இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இதில் சினைப் பரிசோதனை குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினையுரா பசுக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    கால்நடை சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு திட்டப்பணிகள் கால்நடை களிலுள்ள இனங்கள் பராமரிப்பு வளர்ப்பு முறைகள் தீவனப்பயிர்கள் பயன்கள் குறித்த விளக்க குறிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

    சிறப்பான கிடோரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கும் பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
    Next Story
    ×