search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை
    X
    சிறுத்தை

    நம்பியூர் அருகே 3-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

    நம்பியூர் அருகே டிரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் 3-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம், இருகாலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை கால்நடைகளை வேட்டியாடி வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இருகாலூர் என்ற கிராமத்தில் பொன்காத்தஅய்யன் கோவில் குளம் என்ற பகுதியில் சிறுத்தை உலாவி கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுத்தை பதுங்கி இருந்த பொன்காத்த அய்யன்கோவில் குளத்து பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.

    மேலும் வனத்துறையினர் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    சிறுத்தை நடமாட்டம் காரணமாக இருகாலூர் அருகே உள்ள கருக்குப் பாளையம் புதூர் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    பின்னர் வனத்துறை சார்பில் இருகாலூர் கிராமத்தில் தெருக்கள், மெயின் ரோடு பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.

    இதனையடுத்தது பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதியில் நேற்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் டிரோன் கேமரா மற்றும் தானியங்கி கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சிறுத்தை படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது மரத்தில் சிறுத்தையின் முடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் சிறுத்தையின் முடி மாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஊட்டி மூலக்கூறு உயிர்பண்மை ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து டிரோன் மூலம் தொடர்ந்து சிறுத்தையை வனத்துறையினர் 3-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிறுத்தை கண்ணில் பட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வரவேண் டாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே 3-வது நாளாக முடங்கினர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க இருகாலூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×