search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு 3 மடங்கு குறைந்தது

    சென்னையில் தொற்று பரவல் 7 ஆயிரத்துக்கு மேல் சென்ற நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 1,223 ஆக குறைந்துள்ளது. தினமும் 300 பேர் வீதம் பாதிப்பு குறைந்து வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரசுடன், ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து பரவியது. இது சமூக பரவலாக மாறியதால் வேகமாக பரவத்தொடங்கியது.

    ஜனவரி மாதத்தில் இது உச்சத்திற்கு சென்றது. தொற்று பாதிப்பு அதிகம் இருந்தாலும் உயிரிழப்பு குறைவாக காணப்பட்டது. மருத்துவமனைகளில் குறைந்த அளவில் சிகிச்சை பெற்றனர்.

    தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியது. செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று அதிகமாக காணப்பட்டது. தொற்று பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்ற நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி அது 30 ஆயிரமாக குறைந்தது.

    தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையால் தொற்றுப்பரவல் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக குறையத்தொடங்கியது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் தொற்றுப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் வேகம் மேலும் சரியத் தொடங்கியது. கடந்த 10 நாட்களில் 3 மடங்கு
    கொரோனா தொற்று
    ப்பரவல் குறைந்துள்ளது.

    26-ந்தேதி 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 7,500 ஆக குறைந்துள்ளது. 27-ந்தேதி 28,500 பேர், 28-ந்தேதி 26,500 பேர், 29-ந்தேதி 24,500 பேர், 30-ந்தேதி 22 ஆயிரம் பேர், 31-ந்தேதி 19 ஆயிரம் என பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று பரவலின் வேகம் மேலும் குறைந்தது. 1-ந்தேதி 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2-ந்தேதி 14 ஆயிரம், 3-ந்தேதி 12 ஆயிரம் என தினமும் 2 ஆயிரம் பேர் வீதம் பாதிப்பு குறைந்தது.

    சென்னையில் தொற்றுப் பரவல் 7 ஆயிரத்துக்கு மேல் சென்ற நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 1,223 ஆக குறைந்துள்ளது. தினமும் 300 பேர் வீதம் பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல உயிரிழப்பும் குறைந்துள்ளது.

    கடந்த மாதம் உயிரிழப்பு 50-க்கும் மேல் இருந்த நிலையில் தற்போது 30 ஆக குறைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.



    Next Story
    ×