search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையபாளையம் அருகே அரசு புதியதாக கட்டி உள்ள நெல் கொள்முதல் நிலையம்.
    X
    பழையபாளையம் அருகே அரசு புதியதாக கட்டி உள்ள நெல் கொள்முதல் நிலையம்.

    சென்னிமலை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது

    சென்னிமலை அருகே கே.சி.வலசு பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கே.சி.வலசு பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். 

    இது குறித்து விவசாயிகள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி கே.சி.வலசில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

    இந்த மையம் அரச்சலூர், சென்னிமலை ஆகிய நெல் விளையும் விவசாயிகளுக்கு மையப்பகுதியாக உள்ளது. இதனால் சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன் அடைந்தனர்.

    ஆனால், தற்போது புதிய தாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அட்டவணை அனுமன்பள்ளி கிராமம், பழையபாளையம் அருகே அரசு புதிதாக கட்டியுள்ள கட்டிடத்திற்கு மாற்றம் செய்து அங்கு நெல் கொள் முதல் செயல்பட உள்ளதாக அறிகிறோம். அந்த பகுதி நெல் விளைச்சல் இல்லாத பகுதியாகும்.

    அந்த கட்டிடத்தினை சுற்றி பாறை குழிகளாக உள்ளது. அதில் தண்ணீர் நிரம்பி உள்ளது. புதிய கட்டிட நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு செல்லும் வாகனம் செல்வதிலும் சிரமம் ஏற்படும்.

    மேலும் நெல் மூட்டைகளை அடுக்குவது என விவசாயிகள் பெரிதும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை பழைய இடமான கே.சி.வலசு பகுதி லேயே செயல்பட உரிய ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×