search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை வழிமறித்து நிற்கும் ஒற்றை காட்டுயானை.
    X
    அரசு பஸ்சை வழிமறித்து நிற்கும் ஒற்றை காட்டுயானை.

    ஆனைகட்டி அருகே நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

    யானை சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக பஸ்சை மறித்து கொண்டு சாலையிலேயே சுற்றி திரிந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவதையும், பயிர்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவையில் இருந்து நேற்று மாலை ஆனைகட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அரசு பஸ் ஆனைகட்டி அருகே உள்ள தூமனூர் மலைக் கிராம பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையையொட்டிய வனத்திற்குள் இருந்து ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வேகமாக பஸ்சை நோக்கி ஓடி வந்தது. அந்த யானை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

    யானை ஓடி வருவதை பார்த்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார்.

    யானை சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக பஸ்சை மறித்து கொண்டு சாலையிலேயே சுற்றி திரிந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் அச்சம் அடைந்தனர்.

    அப்போது பஸ்சில் இருந்த பழங்குடியி மக்கள் யானை நம்மை ஒன்றும் செய்யாது. சிறிது நேரத்தில் போய் விடும். பயப்பட வேண்டாம் என கூறினர்.

    யானையும் சிறிது நேரத்தில் சாலையை மெல்ல, மெல்ல கடந்து அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டது. இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×