search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் சூடுபிடிக்கும் கட்சி கொடிகள் விற்பனை

    உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சிக் கொடிகள் விற்பனை திருப்பூர் மாவட்டம் முழுவதும் துவங்கியுள்ளது
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் மத்தியில் கூட்டணி பங்கீடு, வார்டு ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, மனுத்தாக்கல் என ஜரூராக தேர்தல் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மனுத்தாக்கல்  இன்று முடிந்துள்ள நிலையில் மனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு பெற்ற பின் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் பிரசாரத்தை தொடங்குவர். அரசியல் என்றாலோ, தேர்தல் பிரசாரம் என்றாலோ கொடிகள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

    இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சிக் கொடிகள் விற்பனை திருப்பூர் மாவட்டம் முழுவதும் துவங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., என முக்கிய அரசியல் கட்சிகள், கொடிகள் பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    பிரசாரத்துக்கு செல்வோர் ஏந்திச்செல்லும் வகையில் சிறிய அளவிலான துணிக்கொடிகள், கைகளில் கொண்டு செல்லும் அட்டை கொடிகள், வாகனங்களில் பொருத்தும் கொடிகள் என அரசியல் கட்சி கொடிகள் மற்றும் சின்னம் பொறித்த கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இது குறித்து கொடி விற்பனையாளர்கள் கூறுகையில்:

    முக்கிய அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னம் கொண்ட துணி மற்றும் காகித கொடிகள் தயார் நிலையில் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் சுயேட்சைகள் போட்டியிடுவர். அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்த பின்னர் உரிய சின்னம் அச்சிட்ட கொடிகள் விற்பனை துவங்கும்.

    சுயேட்சை சின்னங்களின் வடிவம் கொண்ட மோல்டுகள் தயாராக உள்ளன. இவற்றுக்கான ஆர்டர் கிடைக்கப்பெற்றவுடன் அந்த கொடிகளும் தயார் செய்யப்படும். மனுத்தாக்கல் முடிந்து பிரசாரம் துவங்கும் நிலையில் இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்றார். இதே போல் சுயேட்சையாக நகராட்சி வார்டுகளில் போட்டியிடுபவர்கள் நோட்டீஸ் அச்சடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    Next Story
    ×