என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
முதியவர் கடத்தல் வழக்கு - 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தொழில் போட்டியில் அ.தி.மு.க., பிரமுகர் செல்வி என்பவரின் திட்டத்தின் படி கடத்தல் திட்டம் தீட்டப்பட்டது தெரிந்தது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆர்.வி.இ.,லே அவுட்டை சேர்ந்தவர் பாபு(வயது 62). இவர் பழைய பஸ் நிலையம் அருகே ‘சீட்’ கவர் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்தபோது வீட்டுக்கு சென்ற அமராவதிபாளையத்தை சேர்ந்த உறவினர் அஜய்(22) உள்ளிட்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்றனர்
நிலம் வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான அ.தி.மு.க., பிரமுகர் செல்வி என்பவரின் திட்டத்தின் படி கடத்தல் திட்டம் தீட்டப்பட்டது தெரிந்தது.
இதுதொடர்பாக, அஜய், விக்னேஷ்குமார்(25), சுபாஷ் சந்திரபோஸ்(24), ரவிக்குமார்(22), கோபி(24), அருண்குமார்(23) கேரளாவை சேர்ந்த பினிக்ஸ்குமார்(43) என 8 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சுபாஷ் சந்திரபோஸ், ரவிக்குமார் மற்றும் கோபி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவிட்டார். அதன்படி 3 பேரும் ‘குண்டர்’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Next Story






