search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிவகாசி யூனியன் காளையார்குறிச்சி கிராமத்தில் கலிங்கு ஓடை வரத்துக்கால்வாய் அமைக்கும் பணிகளை கலெக்டர் மேகநாத ரெட
    X
    சிவகாசி யூனியன் காளையார்குறிச்சி கிராமத்தில் கலிங்கு ஓடை வரத்துக்கால்வாய் அமைக்கும் பணிகளை கலெக்டர் மேகநாத ரெட

    வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம்  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து  கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் கிராமத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ. 1.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வரும்  பணிகளையும், சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம்  ரூ. 1.40 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளையும், காளையார்குறிச்சி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ. 15.39 லட்சம் மதிப்பீட்டில் கலிங்கு ஓடை வரத்து கால்வாய் அமைக்கும் பணிகளையும்  கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ. 12.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கும் பணிகளையும், காளையார்குறிச்சியில்  சுமார் ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட  பணிகளையும்,  அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் குழந்தைகள் கல்வி கற்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சாணார்பட்டி பகுதியில்  சுமார் ரூ. 35.57  லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள  60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும், சாணர்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுகாதார வளாகத்தையும்,  இதே பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.19.76 லட்சம் மதிப்பீட்டில்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், கட்டசின்னம்பட்டி பகுதியில் ரூ.7.44 லட்சம் மதிப்பீட்டில், 3 மீட்டர் தொலைவில் சிறுபாலம் அமைக்கப்பட்டு வருவதையும்  கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து ஆணையூர் ஊராட்சியில் கண் குறைபாடு  உள்ள மாற்றுத்திறனாளி ரேவதி யின் பயன்பாட்டிற்காக உதயம் திட்டத்தின் கீழ் ரூ.35ஆயிரம்  மதிப்பில் மாற்றுத்திறனாளி கழிப்பறை  அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    முன்னதாக சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி தரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்விராஜ், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×