என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலை (கோப்பு படம்)
    X
    முதலை (கோப்பு படம்)

    சிதம்பரத்தில் கொள்ளிடம் வாய்க்காலில் கரை ஒதுங்கிய முதலை- கிராம மக்கள் பீதி

    வாய்க்காலின் கரையோரம் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று கரை ஒதுங்கியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொள்ளிடம் வாய்க்காலின் கரையோரம் முதலை ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பகுதியில் உள்ள ஞானப்பிரகாசம் குளக்கரை பகுதி அருகே பாலமான் ஓடை உள்ளது. இது கொள்ளிடம் வடிகால் வாய்க்கால் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் குளிப்பதற்கும் துணிகளை துவைப்பதற்கும் இந்த வாய்க்காலுக்கு வருவது வழக்கம்.மேலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் இந்த வாய்க்காலில் மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    நேற்று இந்த வாய்க்காலின் கரையோரம் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று கரை ஒதுங்கியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொள்ளிடம் வாய்க்காலின் கரையோரம் முதலை ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், வாலிபர்கள் என அனைவரும் இந்த வாய்க்காலுக்கு செல்வது வழக்கம். இத்தகைய சூழலில் அந்தப் பகுதியில் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றித் திரிவது கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் இந்த பகுதியில் சுற்றித் திரியும் முதலைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×