என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து 1,042 பேர் குணமடைந்தனர்

    ஈரோட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 1,042 பேர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 1,042 பேர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. 

    இதேபோல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை யும் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 1,070 பேருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 028 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 1042 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 540 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதுவரை 725 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 8,763 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×