என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிமுக
திட்டக்குடியில் நகராட்சி அதிகாரியிடம் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம்
திட்டக்குடியில் நகராட்சி அதிகாரியிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி:
திட்டக்குடி பஸ் நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் ஒரு கடையை அ.தி.மு.க., வினர் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்துவதாக தேர்தல் அலுவலருக்குப் புகார் வந்தது. இதையடுத்து திட்டக்குடி நகராட்சி கமிஷனர் ஆண்டவர் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்று பார்வையிட்டு சீல் வைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது அங்கு வந்த நகர அ.தி.மு.க. செயலாளர் நீதிமன்னன், வக்கீல் ராமச்சந்திரன், தகவல் தொழில்பிரிவு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர், கடையை நாங்கள் ஏலம் எடுத்துப் பயன்படுத்தி வருகிறோம் எனக் கூறினர் . அரசு கட்டிடத்தில் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். தாங்கள் தேர்தல் அலுவலமாக பயன்படுத்தவில்லை.
கடையை சீல் வைப்பதற்கான உரிய உத்தரவைக் காண்பியுங்கள் எனக்கூறி நகராட்சி அதிகாரிகளிடம் அ.தி.மு.க.வினர் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இது குறித்து மேலதிகாரியிடம் கலந்து யோசிப்பதாக கூறிவிட்டு நகராட்சி அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






