என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    சிதம்பரம் அருகே முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி

    சிதம்பரம் அருகே முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.வீரசோழகன் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. கணவரை இழந்த அவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது கொளஞ்சி வீட்டுக்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள் கொளஞ்சியிடம் நாங்கள் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை வாங்கி தருகிறோம். அதற்கு முன் பணமாக ரூ.4000 செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

    இதனை நம்பிய கொளஞ்சி தன்னிடம் இருந்த ரூ. 1000, முக்கால் பவுன் நகையை கொடுத்துள்ளார். நகை- பணத்தை பெற்றுக்கொண்ட 2 பேரும் உடனடியாக வருகிறோம் என்று கூறி விட்டு அங்கிருந்துசென்றனர்.

    ஆனால் 2 பேரும் கொளஞ்சியின் வீட்டுக்கு வரவில்லை. அப்போது மோசடி செய்திருப்பதை கொளஞ்சி உணர்ந்தார்.

    இதனையடுத்து கொளஞ்சி சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×