என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
வெற்றி பெற்ற புறாக்களுடன் உரிமையாளர்கள் உள்ளதை படத்தில் காணலாம்.
ஆறுமுகநேரி-காயல்பட்டினத்தில் தொலைதூர புறா பந்தய போட்டி
By
மாலை மலர்31 Jan 2022 9:54 AM GMT (Updated: 31 Jan 2022 9:54 AM GMT)

ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் தொலைதூர புறா பந்தய போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் பொங்கல் திருநாளுக்கு முன்பும் பின்பும் புறா பந்தயங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட போட்டி மதுரையில் இருந்தும் அடுத்து திருச்சியில் இருந்தும் பின்னர் விழுப்புரத்தில் இருந்தும் புறா பந்தயங்கள் நடந்தன.
காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான 525 கிலோ மீட்டர் தூர புறா பந்தயம் நடைபெற்றது. இதில் காயல்பட்டினத்தை சேர்ந்த 11 நபர்களின் 51 புறாக்கள் பங்கேற்றன.
இவற்றில் காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவை சேர்ந்த சல்மான் என்பவரது புறா 6 மணி 35 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து வந்து முதலிடத்தை பிடித்தது.பெரிய நெசவு தெருவை சேர்ந்த இப்னு மாஜா அர்ஷத் என்பவரின் புறா 6 மணி 35 நிமிடம் 34 வினாடி நேரத்தில் வந்து இரண்டாம் இடத்தை பிடித்தது. 3-வது இடத்தை காட்டு தைக்கா தெருவை சேர்ந்த இம்ரான்கானின் புறா பிடித்தது.
மற்றொரு போட்டி ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் விழுப்புரம் அருகே உள்ள உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆறுமுகநேரி வரையில் நடைபெற்றது.இதில் 6 நபர்களின் 30 புறாக்கள் பங்கேற்றன.
இவற்றில் காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த விமல் என்பவரின் புறா 400 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 43 நிமிடத்தில் கடந்து வந்து முதலிடம் பிடித்தது. 2-வது மற்றும் 3-வது இடத்தையும் இவரது புறாக்களே பிடித்தன.
போட்டிக்கான ஏற்பாடுகளை பந்தய கிளப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×